கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!

0
26

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும்.

இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. 

இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார்.

ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.