கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனேடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டொரொன்டோ வில் (Toronto) நேற்று வெள்ளிக்கிழகை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஈழத்தமிழர் விவகாரங்கள் சார்ந்து இருதரப்புக்குமிடையில் ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.