ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (20) பிற்பகல் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்வையிட்டார்.
எவருக்கும் தெரிவிக்காமல் ஜனாதிபதி தனது தாயாரைப் பார்க்கச் சென்றதாகவும், அவரது திடீர் வருகையை வைத்தியசாலை ஊழியர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் திடீர் வரவால் மருத்துவமனை ஊழியர்கள் பரபரப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
ஜனாதிபதியின் தாயார் கடந்த ஒரு வார காலமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது தாயாரை சந்திக்க ஜனாதிபதி அனுர சென்றுள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.