கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீடிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது.
இதன்படி தாமரை கோபுரம் டிசம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.