அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 4 ஆம் திகதி வெளியானது. இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜூன் சந்தியா தியேட்டருக்கு வந்தார். அப்போது ஏராளமான மக்கள் கூட்டம் அங்கு வந்தமையால் அக்கூட்ட நெரிசலில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தியேட்டர் நிர்வாகிகளை பொலிஸார் கைது செய்தனர். அதேபோல் நடிகர் அல்லு அர்ஜூனையும் கைது செய்து கடந்த 13 ஆம் திகதி சிறையில் அடைத்தனர் பொலிஸார்.
தெலுங்கானா மேல் நீதிமன்றம் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால பிணை வழங்கியமையால் மறுநாள் காலை அவர் சிறையிலிருந்து வெளி வந்தார்.
இந்நிலையில் மேல் நீதிமன்றத்தின் இடைக்கால பிணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொலிஸார் மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்திலும் பிணை பெறுவது தொடர்பில் தனது சட்டத்தரணிகளுடன் அல்லு அர்ஜூன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தாயைத் தொடர்ந்து மகனும் உயிரிழப்பு
உயிரிழந்த பெண்ணின் ஒன்பது வயது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.