வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

0
49

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இன்றையதினம் (12-12-2024) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

இன்றைய நாள் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 அலகுகளால் உயர்ந்ததுடன் இதற்கமைய இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதன் பெறுமதி 14,035.81 அலகுகளாகப் பதிவானது.

இதேவேளை S&P SL20 சுட்டெண் 42.80 புள்ளிகளால் அதிகரித்து இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 4,186.09 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.35 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.