இந்தியாவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

0
43

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 15-12-2024 முதல் 17-12-2024 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். 

ஜனாதிபதி அநுரவுடன் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜித ஹேரத், இணை மந்திரி அனில் ஜயந்த பொனாண்டோ ஆகியோரும் செல்ல உள்ளனர் என்றார். இலங்கை அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.