நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் தென் கொரியா ஜனாதிபதி!

0
41

தென் கொரியாவில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களை கவலை அடைய செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ராணுவ ஆட்சி அமல்படுத்தியதிற்கு என்னை மன்னித்து விடுங்கள்.

ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன். எனது அரசியல் எதிர்காலத்தை கட்சி தீர்மானிக்கும். எனது செயலுக்காக எந்தவொரு விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். இவ்வாறு தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறியதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.