திருமணத்தின் போது மணமக்கள் வித்தியாசமான முறையில் ஊர்வலமாக அழைத்து வரப்படும் காணொளி சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகும்.
தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், மணமகன் தனது திருமண ஊர்வலத்தில் செல்ல நாயுடன் நடனமாடும் காட்சிகள் உள்ளது. அதில் மணமகன் தனது கையில் செல்ல நாயை தூக்கி வைத்துள்ளார்.
அந்த நாய்க்கு இளஞ்சிவப்பு நிற உடை அணிவிக்கப்பட்டுள்ளது. நாயுடன் சேர்ந்து மணமகன் நடனமாடியவாறு ஊர்வலத்தில் செல்லும் காட்சிகள் உள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளை குவித்த இந்த வீடியோவை இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டனர்.