மெட்ரோ ரயிலில் துண்டை மட்டும் அணிந்து பயணம் செய்த 4 பெண்கள்!

0
34

ரஷ்யாவை பிரபல மாடல் அழகியான கேத் சும்ஸ்கயா சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் 3 தோழிகளுடன் இணைந்து கேத் சும்ஸ்கயா குளியலறையில் பயன்படுத்தும் துண்டு மட்டும் அணிந்தவாறு மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

இதுதொடர்பான காணொளியை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அதில் அரைகுறையாக உடம்பை மூடியபடி, ‘ஹை ஹீல்ஸ்’ செருப்பு அணிந்தவாறு அவர்கள் 4 பேரும் மெட்ரோ ரயிலுக்குள் ஏறி பயணிகளுடன் பயணம் செய்துள்ளனர்.

பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரயிலில் ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்தும் அவர்களுடன் கைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டு லூட்டி அடித்துள்ளனர். இந்த காணொளி ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.