யாழ் வைத்தியசாலை ஒன்று தொடர்பில் வெளியான காணொளி; கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!

0
33

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடமை நேரத்தில் மருந்து வழங்கும் ஊழியர்கள் இல்லாததால் மருத்தை பெறுவதற்கு நீண்டநேரமாக நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை தோன்றியுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு தினமும் வெளிநோயார்கள் பலர் வந்து செல்கின்றனர். அந்தவகையில் தூர தேச பிரதேசங்களில் இருந்தும் மக்கள் சிகிற்சை பெறுவதற்காக அங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்றும் (7) அதிகாலையில் வந்து காத்திருந்த நோயாளிகள் மருத்துவரிடம் மருந்து சீட்டை பெற்று மருந்த்து வாங்க மருத்துவமனை மருந்தகத்தில் 45 நிமிடங்களுக்கு மேலாக தாம் காத்திருப்பதாகவும் எனினும் மருந்து வழங்கும் ஊழியர்கள் இதுவரை வரவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.