நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

0
38

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எஸ். எம்.நளீம் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையிலேயே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வென்றது.

அதன்படி கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்ற நிலையில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ். எம்.நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கான இன்றைய அமர்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. நாடாளுமன்றம் இன்று (03) முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் மாலை வரை. 5.30 மணி வரை அது தொடர்பிலான விவாதம் நடைபெறவுள்ளது.