வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் திங்கட்கிழமை (25) மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயாரால் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் மலர் அஞ்சலியும் இடம்பெற்று இருந்தது.