30 வருட மண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

0
66

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளமை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாகவே தமிழ் சினிமா தம்பதிகளிடயே விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் 3 தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்ய இருந்தனர்.

ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகவும் ஒருவருக் கொருவர் மிகவும் அன்பாக இருந்தபோதிலும் பிரிவது என முடிவு செய்துள்ளனர்.

மன கசப்புக்கள் மற்றும் பல சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது. மிகுந்த வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார் என சாய்ராவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.