அநுர ஆட்சியில் டக்ளஸ் மற்றும் பிள்ளையான் கைது செய்யப்படுவார்கள்? முக்கியஸ்தர் தகவல்

0
73

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியின் கீழ் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என அரசியல் ஆய்வாளர்  எம்.எம் நிலாம்டின் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று முன் தினம் (15) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதுவரையில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டுக்கள் பெருமளவில் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இனி வரும் காலங்களில் அவர் மேலிருந்த ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வெளிவரும்.

இனிவரும் காலங்களில் நீதி மற்றும் சட்டத்தினுடனான ஆட்சி முன்னெடுக்கப்பட போகின்றது. இந்நிலையில் நீதியின் அடிப்படையில் டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்பட்டால் அவர் மீது குற்றச்சாட்டுகள் வெளிவரும்.

கொஞ்சம் பொருத்து இருந்தால் டக்ளஸ் தேவானந்தா மீதான ஏராளமான குற்றசாட்டுக்கள் அடுத்தடுத்து முன்வைக்கப்படும். டக்ளஸ் மீது இளைஞர்கள் மீதான கொலை வழக்குகள் மற்றும் ஆட்கடத்தல் என அதிகமான வழக்குகள் உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதனை கையிலெடுக்கும் போது சட்டம் தன் கடமையை செய்யும்.

டக்ளஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் பல மறைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இருக்கின்ற நிலையில் அவர்கள் முன்வரும் போது அவர் கைது செய்யப்படுவார்.

இதையடுத்து பிள்ளையானை எடுத்துகொண்டால் மஹிந்த ராஜபக்ஷ காலம் தொட்டு ஏராளமான கொலைகள் தொடர்பில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் அடுத்து மாகாணசபை தேர்தல் வரும்போது அவர் அந்த தேர்தலில் போட்டியிடுவார் இருந்தாலும் நிச்சயமாக அநுரவின் ஆட்சிக்குள் மக்கள் இவர்களை எடுக்கவே மாட்டார்கள். இவ்வாறு இரத்தக்கரை படிந்தவர்களை அநுரவின் ஆட்சியில் ஒரு போதும் எடுக்க மாட்டார்கள்.

இதனடிப்படையில் இவ்வாறு பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை புரிந்து நீதிமன்றத்தில் முன்னிருத்தப்பட வேண்டியவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அத்தோடு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதும் நிச்சயம்.

இன்னும் 6 மாதங்களோ அல்லது 4 மாதங்களிளோ அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தூசு தட்டப்பட்டு வாக்குமூலங்கள் வழங்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.