அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், பைடனிடம் ‘அரசியல் கடினமானது’ என்று கூறினார்.
பல சமயங்களில் உலகம் நல்ல முறையில் நடந்துகொள்வதில்லை, ஆனால் இன்று உலகம் நன்றாக இருக்கிறது என்றார். அதோடு தாம் எதிர்பார்க்கும் சுமூகமான அதிகார மாற்றத்திற்கு அவர் பைடனுக்கு நன்றி தெரிவித்தார்.
மிகவும் சுமுகமான அதிகார மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். எந்த அளவுக்குச் சுமுகமாக இருக்க முடியுமோ அது அந்த அளவுக்குச் சுமுகமாக இருக்கும் என்றும் டிரம்ப் இதன்போது கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.