இஸ்ரேல் கடைப்பிடிக்கின்ற யுத்த முறைமை, இனவழிப்புக்கு ஈடானது; ஐக்கிய நாடுகள் சபை

0
80

காசாவில் இஸ்ரேல் கடைப்பிடிக்கின்ற யுத்த முறைமை, இனவழிப்புக்கு ஈடானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழு அறிவித்துள்ளது. குறிப்பாக இஸ்ரேல் காசாவில் பட்டினியை ஒரு யுத்த ஆயுதமாகப் பயன்படுத்தி இருப்பதாக அந்த குழு குற்றம் சுமத்தியுள்ளது.

பாலஸ்தீனியவர்களுக்கு எதிராக பாரிய மனித பாதிப்புகள் மற்றும் உயிரச்சுறுத்தல் சம்பவங்கள் திட்டமிட்டவகையில் அமுலாக்கப்பட்டுள்ளன.

காசாவில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மனிதாபிமான நடவடிக்கைகளைத் தடுத்தல், பொதுமக்கள் மற்றும் தொண்டு பணியாளர்களை இலக்குவைத்து தாக்குதல் போன்ற குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கருத்திற் கொள்ளாமல், இஸ்ரேல் உள்நோக்கத்துடன் கொலைகள், பட்டினி நிலைமை மற்றும் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாக்குதல் போன்ற நிலைமைகளை ஏற்படுத்தி வந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் விசேட குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.