ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமைப் பதவியில் இருந்து விலகும் அனுர

0
55

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவார் என உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அக்கட்சியின் புதிய தலைவராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஓரிரு வருடங்களின் பின்னர் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து டில்வின் சில்வாவும் விலகுவார் என்றும் அந்த பதவிக்கு விஜித ஹேரத் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

நளிந்த ஜயதிஸ்ஸவிற்கு கட்சியின் பிரசார செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவலை இதுவரை கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.