காலி (Galle) மாவட்டத்தில் கித்துல் தேனின் விலை அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விலை அதிகரிப்பிற்கு கித்துல் தேனின் உற்பத்தி குறைந்துள்ளமையே காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது உயர்தர கித்துல் தேன் போத்தல் ஒன்றின் விலை 1500 ரூபாவாகும். இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் கித்துல் தேனின் விலை இதை விட மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அண்மையில் பேக்கரி பொருட்களின் விலையை நுகர்வோருக்கு பலன் அளிக்கும் வகையில் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயத்தை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன (N. K.Jayawardena) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.