ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த டிரம்ப்

0
18

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கலந்துரையாடலில் நிர்வாகத்தை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்துவதாக உறுதியளித்தமையானது தொழிற்துறையினர் மத்தியில் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக நேற்றையதினமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய கடல் காற்று மேம்படுத்தல் நிறுவனமான ஓர்ஸ்டெட் (Orsted) நிறுவனம் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெனால்ட் ட்ரம்பின் வெற்றியின் பின்னர் அவரது குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த புகைப்படத்தில் உலக செல்வந்தரான ஈலோன் மஸ்கும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.