போட்ஸ்வானா நாட்டில் புதிய ஜனாதிபதி பதவியேற்பு: 58 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி மாற்றம்

0
24

போட்ஸ்வானா நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக டுமா பொகோ இன்று சனிக்கிழமை பதவியேற்றுள்ளார்.உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டுமா பொகோவுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

உலகில் அதிக யானைகளை கொண்ட நாடாகவும் அதிக வைர சுரங்கங்கள் அமைந்துள்ள நாடாகவும் போட்ஸ்வானா காணப்படுகிறது.

அந்நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் டுமா பொகோ தலைமையிலான ஜனநாயக மாற்றத்திற்கான குடை கூட்டணி வெற்றிபெற்றது அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் மொக்வெஸ்டி மசிசி மீண்டும் போட்டியிட்டார்.

போட்ஸ்வானா 1966 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்நாட்டை போட்ஸ்வானா ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்நாட்டின் ஜனாதிபதியாக மொக்வெஸ்டி மசிசி செயற்பட்டு வந்தார்.

தற்போது தேர்தலில் டுமா பொகோ தலைமையிலான ஜனநாயக மாற்றத்திற்கான குடை கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் போட்ஸ்வானாவில் 58 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.