பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

0
26

2024 பொதுத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் விருப்பு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கினை அளிக்க முடியும் எனவும் அதனை ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேச்சைக் குழுவிற்கு வழங்களாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்க, நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் சின்னத்திற்கு அருகில் அல்லது சுயேச்சைக் குழுவின் எண் மற்றும் சின்னத்திற்கு முன்னால் ‘x’ குறியை இட முடியும்” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாக்காளர்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்து மூன்று வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முடியும்.

அதன்படி வாக்காளர்கள் வாக்குச் சீட்டின் முடிவில் ஒவ்வொரு வேட்பாளரின் எண்ணுக்கும் அடுத்ததாக ‘x’ குறியை இடமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களுக்கு யாராவது வாக்களித்தாலோ ‘x’ குறியைத் தவிர வேறு ஏதேனும் ஒரு குறியைப் பயன்படுத்தினாலோ வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.