ஆசிய செஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் யாழ் சிறுமி

0
63

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இணுவில் கிழக்கு தியேட்டர் லேனைச் சேர்ந்த செல்வி கஜிஷனா- தர்ஷன் தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதேவேளை வட மாகாணத்தால் ஒரே ஒரு தங்க பதக்கம் மாத்திரமே வெல்லபட்ட நிலையில் அதனை குறித்த சிறுமியே பெற்றுள்ளார். இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக கஜிஷனா- தர்ஷன் பங்குபற்றவுள்ளார்.

அத்துடன் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக கஜிஷனா- தர்ஷன் விளையாடவுள்ளார்.

வடமாகாணம் மட்டும் அன்றி இலங்கையில் மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமியாக இவர் திகழ்கிறார். அத்துடன் Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன் உலக அளவில் 4 ம் இடத்தில் உள்ளார்.

மேலும் இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion 2024 இல் வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடங்களையும் கஜிஷனா- தர்ஷன் பெற்றவர் ஆவார். 

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியிலும் கஜிஷனா- தர்ஷன் வெற்றி பெற வேண்டுமென பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.