நாடாளுமன்றம் திருடர்களின் கூடாரம் என விமர்சிக்கும் உரிமையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கியாது யார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுன்னார். நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
‘‘42 வீதமான மக்கள் ஆணையே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தது. 58 வீதமான மக்கள் ஆணை எதிர்க்கட்சிகளுக்குதான் கிடைத்தது. அதனால் இந்த நாடாளுமன்றத்தின் திருடர்களின் கூடாரமென ஜனாதிபதியால் விமர்சிக்க முடியாது. அந்த அதிகாரம் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இல்லை.
ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் மிகவும் பழமை வாய்ந்த நாடாளுமன்றமே இலங்கையின் நாடாளுமன்றம். 1935ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. ஆசியாவில் ஒருநாளும் மூடப்படாது செயல்பட்டதும் எமது நாடாளுமன்றம்தான்.
சர்வஜன அதிகாரத்தின் ஊடாக எமது நாடாளுமன்றம் அன்றுமுதல் இயங்குகிறது. நாடாளுமன்றத்தில் கை வைக்க ஜனாதிபதி யார்? அல்லது தேசிய மக்கள் சக்திக்கு என்ன அதிகாரம் உள்ளது? நாடாளுமன்றம்தான் ஜனாதிபதியை கட்டுப்படுத்துகிறது. ஆகவே ஜனாதிபதி எவ்வாறு நாடாளுமன்றத்தை திருடர்களின் கூடாரம் என விமர்சிக்க முடியும்.‘‘ என்றார்.