உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைடன்ஸின் இணை ஸ்தாபகர் ஜாங் யிமிங் (Zhang Yiming) சீனாவில் கோடீஸ்வரரானார்.
ஜாங் யிமிங் (Zhang Yiming) 49.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அதேசமயம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சொத்து மதிப்பு 43 சதவீதம் அதிகமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு 41 வயதான ஜாங் யிமிங் (Zhang Yiming) நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகினார்.
எனினும் நிறுவனத்தின் சுமார் 20 சதவீத சொத்துக்கு உரிமையாளராக இருந்தார். சீன அரசுடனான உறவு குறித்து சில நாடுகள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாலும் உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடகளில் ஒன்றாக டிக்டொக் மாற்றமடைந்துள்ளது.
இரு நிறுவனங்களும் தாங்கள் சீன அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக இயங்குவதாக வலியுறுத்தினாலும், பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டோக்கை விற்பனை செய்யாவிட்டால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் அதை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டாலும் கடந்த ஆண்டு உலகளாவிய ரீதியில் இலாபத்தை 60 சவீதமாக பைடான்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது.
இதனால் ஜாங் யிமிங்கின் (Zhang Yiming) தனிப்பட்ட சொத்து அதிகரித்துள்ளது. “சாங் யிமிங் (Zhang Yiming) கடந்த 26 ஆண்டுகளில் சீனாவில் நாங்கள் பெற்ற 18 ஆவது புதிய கோடீஸ்வரர் “என ஹுருன் ரூபர்ட் ஹூக்வெர்ஃப் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பில் கேட்ஸ், வாரன் பஃபெட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகிய 4 பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக உள்ள நிலையில் டிக்டொக் ஸ்தாபகரின் (Zhang Yiming) வளர்ச்சி சீனப் பொருளாதாரத்தின் வேகத்தை குறிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..