புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை ; விஜித தெரிவிப்பு

0
29

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் எந்தவொரு நாட்டிலிருந்தும் கடனுதவியோ மற்றும் இதுவரை பணத்தாள்களோ அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக, புதிய திரைச்சேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வெளியிடும் முறையை மத்திய வங்கி கொண்டுள்ளது.

அந்த செயல்முறை வழமையாக நடக்கும் ஒன்று. மேலும் பணம் அச்சிடுவதை எடுத்துக் கொண்டால் உண்மையில் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நாணயத்தாள் ஒன்றை பார்க்க எனக்கும் விருப்பம். ஆனால் இதுவரை அது வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.