2022 இன் பின் சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!

0
39

2022ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (29) 12,745.60 புள்ளிகளை பதிவு செய்துள்ளதாக கொழும்பு பங்கு சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் 135.54 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இன்று (29) பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.96 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை கூறியுள்ளது.