ஈசனை தூக்கி எறிந்தது மொட்டு!

0
37

கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை ஆகிய காரணங்களுக்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து ஈசன் என்றழைக்கப்படும் ம. பரமேஸ்வரன் என்பவர் நீக்கப்படுகிறார் என பெரமுன அறிவித்துள்ளது.

இத்தீர்மானம் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.

பரமேஸ்வரன் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றசாட்டில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டார்.

மேற்குறித்த நபரால் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட மற்றும் இனிமேல் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்காது என்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்தியகுழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும், கட்சி நலன் மற்றும் மக்கள் சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும்.

அதேவேளை சட்ட விரோத ஊழல் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.