அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபரும் உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்துள்ளார். 1909ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார்.
முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியைக் கண்டுள்ளார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 115ஆவது பிறந்தநாளில் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த குறிப்பை பிரான்சிஸ் வழங்கி உள்ளார்.
முந்தைய நீண்ட ஆயுட்காலச் சாதனையாளரான எடி செக்கரெல்லி கலிபோர்னியாவில் தனது 116ஆவது பிறந்தநாளுக்குச் சில வாரங்களுக்குப் பிறகு இறந்ததை அடுத்து எலிசபெத் பிரான்சிஸ் இந்த ஆண்டு பெப்ரவரியில் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார்.
ஏப்ரல் மாதம் LongeviQuestஇல் இருந்து அமெரிக்காவில் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கும் விருது அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது அமெரிக்காவின் மிக வயதான நபர் நவோமி வைட்ஹெட் ஆவார்.