கொழும்பு 7 இல் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டபோதிலும் அவை இன்னும் கையளிக்கப்படவில்லை என்று அரச தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி மொத்தம் 34 இல்லங்களில் 29 இல்லங்களின் சாவிகள் இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இல்லங்களை ஒப்படைக்காவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் ஏற்கவே அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.