இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனா கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

0
50

வங்காளதேசத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டத்தை அடுத்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். 

இதனையடுத்து, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. இவ்வாறானவொரு நிலையில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் திகதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் உள்ள ஹசீனாவை நாடு கடத்த வங்காளதேச அரசாங்கம் இந்தியாவுக்கு அதிக அழுத்தம் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.