டொனால்ட் டிர்ம்பிற்கு 70 மில்லியன டொலர் நன்கொடை வழங்கிய எலான் மஸ்க்!

0
28

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் இந்தியவம்சாவளி சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார். 

இந்நிலையில், தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலான் மஸ்க் 70 மில்லியன டொலர் நன்கொடை வழங்கியுள்ளார். இதன்மூலம் குடியரசு கட்சியின் பெரிய நன்கொடையளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

பென்சில்வேனியாவில் இந்த மாதம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எலான் மஸ்க் டிரம்புடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.