எல்லைப் பகுதியில் கிராமத்தையே உருவாக்கிய சீனா!

0
46

இந்திய எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. 

இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது. 

எல்லையில் இருந்து 36 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 – 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.

இந்த பகுதியைச் சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும் அவசியம் ஏற்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. பாங்கோங் ஏரி அருகே மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்குச் சீன கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 4,347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2020 வாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது குறிப்பிடத்தக்கது.