இலங்கையுடனான வர்த்தகம்: தீவிரம் காட்டும் பிரித்தானியா

0
20

ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் பொறிமுறைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

“வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான கட்டணங்களைக் குறைப்பதற்கும் வர்த்தக ஒழுங்குமுறைகளை நெறிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது ” என்று வணிகம் மற்றும் வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் கடந்த வாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் பிரித்தானிய வர்த்தகம், முதலீடு, வர்த்தகக் கொள்கை, இலங்கையில் செய்யப்படும் ஏற்றுமதி நிதி ஆகியவற்றை ஊக்குவிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக தெற்காசியாவிற்கான வர்த்தக ஆணையாளர் கூறினார்.

வருடாந்த பிரித்தானியா – இலங்கை மூலோபாய உரையாடல் நிகழ்வுகள் மூலம் இரு நாட்டு அரசாங்க அதிகாரிகளும் தொடர்ந்தும் இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுதாகவும் அவர் கூறினார்.

இந்த மூலோபாய முன் முயற்சிகள் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பதையும் வலுவான பொருளாதார உறவுகளை வளர்ப்பதையும் இரு நாடுகளுக்குமான தொழில் வாய்ப்புக்களை விரிவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.