11,000 வைரங்களால் உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா உருவப்படம்: தனித்துவமான அஞ்சலி

0
18

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த வாரம் அவரது 86ஆவது வயதில் காலமானார். இவர் வழிநடத்திய டாடா குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று.

பெரிய செல்வந்தராக இருந்தாலும் நல்ல மனிதராகவும் வாழ்ந்தமையால் இவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் டாடா மீது அதிக அன்பு கொண்டவர்.

தான் மிகவும் நேசித்த டாடாவின் மரணத்துக்கு தனித்துவமாக அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக 11,000 அமெரிக்க வைரங்களை பதித்து ரத்தன் டாடா உருவத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்துக்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றுள் “தன்னிகரற்ற தலைவரை பெருமைப்படுத்த 11,000 வைரங்கள் போதுமானதாக இருக்காது”.

“ரத்தன் டாடா தான் உண்மையான வைரம்”

“ரத்தன் டாடா எனும் வைரத்துக்கு இந்த 11,000 வைரங்கள் ஈடாகாது”

இவ்வாறு மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் ரத்தன் டாடா மீது மக்களுக்கு இருக்கும் அன்பும் மதிப்பும் வெளிப்படுகின்றது.