முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயின் சதியால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இரத்தினபுரி மாவட்டத்திற்காக தான் பரிந்துரைக்கப்படவில்லை என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நடிகை தமிதா அபேரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நான் ஹேஷாவை என் சகோதரன் போல்தான் நடத்தினேன். இரத்தினபுரியில் நீங்கள் கேட்கலாம் என்று ஹெஷாதான் பரிந்துரைத்தார்.
சஜித் சார் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எதையும் சொல்லுங்கள் என்றார். வேட்புமனு தொடர்பாக நியமனக் குழு இருந்தது. அது எனக்கு அனுமதி தந்தது.
பின்னர் கடந்த 08-10-2024ஆம் திகதி வேட்புமனுவில் சென்று கையெழுத்திட்டேன். அதன் பின்னர் ரோஹினி கவிரத்னவுடன் பேசினேன்.
கடந்த 9ஆம் திகதி ஹேஷா அலுவலகத்திற்கு சென்று இதை மாற்ற வேண்டும் என்று கூறியதாக கூறினார். வேறு யாரையாவது இதில் போடச் சொன்னார் என்றார். ஆனால் ஹேஷா என்னை வாழ்த்தி வேறு விளையாட்டை விளையாடியுள்ளார்.
இரத்தினபுரியின் எதிரொலியில் அவர் பயந்திருக்க வேண்டும், இது முழுவதுமாக சதிதான். நான் கவலைப்படவில்லை. எனக்கு பல இடங்களில் இருந்து கோரிக்கைகள் வந்தன.
எனக்கு மற்ற கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து கோரிக்கைகள் இருந்தன. ஹேஷா எனது உரிமை அழித்துள்ளார்” என நடிகை தமிதா அபேரத்ன கூறியுள்ளார்.