நூறு நாட்களில் 100 மரதன் போட்டியில் ஓடிய கனடியர்

0
20

கனடாவின் ஹிப் ஹாப் இசை கலைஞர் ஒருவர் 100 நாட்களில் 100 மரதன் ஓட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். குறித்த நபர் சுமார் 4200 கிலோ மீட்டர் தூரத்தை ஓடியுள்ளார்.

மக்கள் மத்தியில் ஆண்களின் உளச்சுகாதாரம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். பிரபல ஹிப்போப் கலைஞர் டிலான் கிங் என்ற 32 வயதான கலைஞரே இவ்வாறு 100 மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அவர் இவ்வாறு நூறு மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஆண்கள் தங்களுடைய பிரச்சனைகளை வெட்கமின்றி வெளியே சொல்வதற்கான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்த கிங் அதிலிருந்து விடுபட்டு மக்களை தெளிவூட்டும் வகையில் தற்பொழுது மரதன் ஓட்ட போட்டிகளில் பங்கேற்ற வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.