எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள 77ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஜனாதிபதி தலைமையில், பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் பங்கேற்புடன் அமைச்சரவைக் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரதின வைபவத்தைப் பெருமையுடன் ஒழுங்குபடுத்துவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்புடைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் வழிநடாத்தல் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.