மாவையின் ஆசி பெற்று மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் கே.வி.தவராசா

0
41

இலங்கை தமிழரசு கட்சியின் ஜனநாயகப் பிரிவினருக்கு முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா தனது ஆதவை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் கே.வி.தவராசா தலைமையிலான அணியினர் மாவையை அவரது வீட்டில் சந்தித்து மாம்பழம் வழங்கி ஆதவை கோரியிருந்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து திட்டமிட்ட முறையில் ஓரங்கட்டபட்டவர்கள் மற்றும் ஈழ தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட சனநாயக தமிழரசு கூட்டமைப்பினர் வேட்பு மனுதாக்கலை தொடர்ந்து இவ்வாறு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.