முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகரவை (10-10-2024) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அபேசேகர, பொலிஸ் திணைக்களத்தின் புதிய சொத்துக்கள் மீட்புப் பிரிவிற்கு தலைமை தாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.