‘தேசத்தின் பாதுகாவலர்’: 75 வது இலங்கை இராணுவ தினம்

0
80

பயங்கரவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் இருந்து தேசத்திற்கு நீடித்த அமைதியைக் கொண்டு வந்த ஈடு இணையற்ற சேவை வழங்குனர் மற்றும் பெருமைக்குரிய ‘தேசத்தின் பாதுகாவலர்’ ஆகிய இலங்கை இராணுவம் தனது 75 வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர் 10) பிரமாண்டமாகக் கொண்டாடியது.

இந்நிகழ்வு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூவின் தலைமையில் பனாகொடை இராணுவ வளாகத்தில் நடைப்பெற்றது.

இராணுவ தின அணிவகுப்பில் கட்டளையாளராக மேஜர் ஜெனரல் அமரபால அவர்கள் செயற்பட்டதுடன், அணிவகுப்பில் இராணுவத்தின் அனைத்து படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 75 அதிகாரிகள் மற்றும் 626 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, 75 வது இராணுவ ஆண்டு நிறைவு பதக்கம் அனைத்து படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 35 அதிகாரிகள் மற்றும் 25 சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இராணுவத்தின் அபிமானத்திற்காக சேவையில் ஈடுபட்டிருந்த 9 இராணுவ வீரர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் இராணுவ தளபதிகள், யுத்தத்தின் போது காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர், சேவையிலுள்ள அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இராணுவத் தளபதி நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் தாய்நாட்டின் அபிவிருத்திக்கு இராணுவத்தின் அனைவரினதும் சேவையை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆயுதப்படைகள் எப்போதும் அர்ப்பணிப்புடன் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.