அனுரவுடன் கூட்டுக்கு தயாராகும் சி.வி.விக்னேஸ்வரன்

0
69

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இளைஞர்களை களமிறக்கி தாக்கல் செய்துள்ளது. நான் ஏற்கனவே கூறியது போன்று கூட்டணியில் இளைஞர்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்து தேர்தலில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டுள்ளேன்.=

அதேவேளை அநுரகுமார அரசு புதிய அரசமைப்பைத் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துள்ள நிலையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை அநுரகுமார அரசு உண்மையில் ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம்.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தியினர் அதிகளவான இளைஞர்களை உள்ளீர்த்தமை போன்று நாமும் இளைஞர்களை உள்ளீர்த்துப் பலமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோமெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மற்றக் கட்சிகளை நாங்கள் விமர்சனம் செய்யாமல் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதையே கூறி எமது பிரசாரங்களை முன்னெடுப்போம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.