இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற தென் கொரிய எழுத்தாளர்

0
68

2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார். மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்த ஹான் காங் சிறுகதைகள், நாவல்கள் என இதுவரை பல நூல்களை எழுதியுள்ளார். எழுத்தாளர் ஹான் காங் நாவலான, த வெஜிடேரியன் ( the vegetarian) புக்கர் பரிசை வென்றது. இதனை தமிழில் எழுத்தாளர் சமயவேல் ‘மரக்கறி’ என்கிற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.