நடுவானில் திடீரென ஒளிபரப்பான ஆபாச படம்; மன்னிப்பு கோரிய நிறுவனம்

0
98

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் இருந்து ஜப்பானில் உள்ள ஹனேடா நகருக்கு கடந்த வாரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்னாஸ் QF59 விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

எல்லா விமானங்களிலும் பொதுவாக ஒருவொரு சீட் இருக்கைகளுக்கு முன்னே பயணிகள் பொழுதுபோக்குக்காக டிவி மாட்டப்பட்டிருக்கும். அதில் தங்களுக்கு விருப்பமான படங்களை பயணிகள் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

இந்நிலையில் அன்றைய தினம் பயணிகளால் படங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை எனதுடன் அதற்குப் பதிலாக அனைவரின் திரைகளிலும் ஆபாசப் படம் ஒளிபரப்பாகியுள்ளது.

அதைப் பயணிகள் PAUSE செய்து நிறுத்தவோ அல்லது மொத்தமாக ஆப் செய்வவோ முடியாமல் இருந்ததால் பயணிகள் பலருக்கு அசௌகரியமான சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஆபாசப் படம் ஓடிய பிறகே பழுது சரி செய்யப்பட்டு வேறு படங்களை மாற்ற முடிந்திருக்கிறது.

விமானத்தின் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பழுது காரணமாக இது நடத்ததாக விமான ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளதுள்ளனர். இது குறித்து விமானத்தில் பயணித்த சில பயணிகள் இணையத்தில் பேசியதை அடுத்து இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.