வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய Soyuz MS-25 விண்கலம்: புது கட்டளைத் தளபதியாக சுனிதா வில்லியம்ஸ்

0
78

சோயுஸ் எம்எஸ் – 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. கொனோனென்கோ, ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய நாசா மற்றும் ரஷ்ய வீரர்கள் மூவருடனேயே இவ் விண்கலம் கஜகஸ்தானில் பாரசூட் உதவியுடன் தரையிறங்கியுள்ளது.

374 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்ததன் மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர்கள் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளனர் இம் மூவரும்.

‘எக்ஸ்பெடிஷன் 71’ என்ற இக் குழு நாசாவின் எதிர்கால நிலவு மற்றும் செவ்வாய் கிரக பயணங்களுக்கான தொழில்நுட்ப பரிசோதனைகளை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு செய்தது.

இந்த விண்கலம் வெற்றிகரமாக திரும்பியதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டளைத் தளபதியாக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.