நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்றத் தலைவர்கள் கடும் சிரமம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அதற்காக ஐந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகு, 169 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பொறுப்பு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அவர் சுகயீனமுற்றிருப்பதால், சொத்துப் பொறுப்பு அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என அவரது செயலாளர் ஒருவர் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.