பிளவுபட்டுள்ள தமிழரசுக் கட்சியால் சிதறடிக்கப்படும் தமிழர்களின் வாக்குகள்

0
73

தமிழரசுக் கட்சி பிளவுபட்டு தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படும் பட்சத்தில் அது வடக்கு தமிழ் அரசியல் களத்தில் பாரிய விளைவை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) பொருளியல் துறையின் விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி (M. Ganesamoorthy) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களிடம் தென்னிலங்கை வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரும் போது அங்கு தமிழ் பொது வேட்பாளர்களுக்கான வாய்ப்பு குறைகின்றது.

அத்தோடு, ஒரு சிலர் சஜித் பிரேமதாசவிற்கும் (Sajith Premadasa) மற்றும் ஒரு சிலர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கும் என்ற சூழலுக்கு தற்போது தமிழரசுக் கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான வாக்குகள் குறையும் போது அது எதிர்கால அரசியலை பெரிதும் பாதிக்கும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.