அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மே 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர்.
இவர்கள் சென்ற ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் உருவானது.
இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப 2025 ஆண்டு பெப்ரவரி மாதம் ஆகும் என நாசா தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் சுனிதா வில்லியம்ஸ் 2ஆவது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.
இதன்படி சுனிதா வில்லியம்ஸ் இம்மாதம்19ஆம் திகதி தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதற்கு முன்பு கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியிலிருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்குக் கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.