பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்

0
71

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர்.

மேலும் 90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாபாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார். பீல்ட் ஆப் ட்ரீம்ஸ், கோனன் தி பார்பேரியன், கம்மிங் டு அமெரிக்கா மற்றும் பல படங்களில் நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து இவரைக் கௌரவிக்கும் விதமாகக் கடந்த 2011ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆஸ்கர் அகாடமி வழங்கியது.

இந்நிலையில், ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்சின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.