யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்!

0
76

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுழற்றி அடித்த காற்றால் பல பகுதிகளில் பயன் தரு மரங்கள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்  யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்திலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட  அரசமரம் வேரோடு சாய்ந்துள்ளது.

குப்பிளான் கிராமத்தின் முக்கிய ஆலயமாக விளங்கும் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் முன் நெடுங்காலமாக இருந்த பாரிய அரசமரமே இவ்வாறு நேற்றடித்த காற்றில் வேரோடு சாய்ந்துள்ளது.   

அதேவேளை அரசமரம் இருந்த இடத்தின் அருகே குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் பாரிய அரசமரம் பாரசாலை கட்டிடத்தில் விழுந்துள்ளது.

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்! | A 150 Year Old Banyan Tree Rooted Jaffna Kuppilan

இதனால் பாடசாலை கட்டிடமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் அந்த நேரத்தில் மாணவர்கள் யாரும் பாடசாலையில் இருக்கவில்லை என்பது கடவுள சித்தமென கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.  

இரவுவேளையில் அரசமரம் விழுந்ததால் பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டதாக கிராம கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் மரத்தை அகற்றுவதற்கான பணியினை சம்பந்தப்படவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

யாழில் சுழற்றிஅடித்த காற்றால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசமரம்! | A 150 Year Old Banyan Tree Rooted Jaffna Kuppilan